எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ரகசிய மகளா இவர்? உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த கேரள பெண்

தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மகள் நான் என கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுனிதா என்ற அந்தப் பெண், தனது வாரிசுரிமையை டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபிக்க வேண்டும் என்று கோரியிருப்பது, தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுனிதா கே.சி. என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா தம்பதியின் ஒரே மகள் தாம்தான் எனக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, தனது சிறு வயதிலேயே தன்னை கேரளாவுக்கு அனுப்பி வைத்ததாகவும், அங்கே எம்ஜிஆரின் தங்கை மகளான வசந்தாமணி என்பவர் தன்னை வளர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். வசந்தாமணி இறக்கும் தருவாயில் இந்த உண்மையை தன்னிடம் தெரிவித்ததாக சுனிதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உறவினர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் தன்னிடம் வந்து பேசி, இந்த உண்மையை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் சுனிதா தெரிவித்துள்ளார். தனது பிறப்பு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருப்பதாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது கூற்றை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க, ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து, டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என சுனிதா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன.

எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கையில் இதுவரையிலும் வெளிவராத ஒரு ரகசியப் பக்கத்தை சுனிதாவின் இந்த மனு கிளறியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று விசாரணை நடத்துமா, டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிடுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் முடிவு, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.