தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த ‘விசில்’ பட நாயகன் விக்ரமாதித்யாவை நினைவிருக்கிறதா? பல வருடங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ள அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்று பார்த்தவரா இவர் என ஆச்சரியத்துடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2003 ஆம் ஆண்டு வெளியான ‘விசில்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விக்ரமாதித்யா. முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றத்தால் இளம் ரசிகர்களை கவர்ந்த இவர், தொடர்ந்து சில படங்களில் நடித்தார். பின்னர் திரையில் அதிகம் காணப்படாத நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் அவரது புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முன்பு ஸ்லிம்மாகவும், இளமையாகவும் காணப்பட்ட விக்ரமாதித்யா, தற்போது உடல் எடை கூடி, முதிர்ச்சியான தோற்றத்தில் அடையாளம் காணமுடியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ‘இது நம்ம விசில் பட ஹீரோவா?’ என கமெண்ட்களையும், ஆச்சரியங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அவரது இந்த திடீர் மாற்றம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர்களின் தோற்ற மாற்றம் என்பது இயல்பான ஒன்று என்றாலும், விக்ரமாதித்யாவின் இந்த லேட்டஸ்ட் லுக் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அவரது புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் மீண்டும் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.